×

கொப்புடையம்மன் கோயில் திருவிழா நள்ளிரவு வரை தேர் இழுத்து பக்தர்கள் வழிபாடு

திருமயம், மே 30: திருமயம் அருகே நள்ளிரவு வரை நடைபெற்ற வினோத தேர் திருவிழாவில் திருளான பக்தர்கள் கலந்து கொண்டு நள்ளிரவு வரை தேர் இழுத்து சென்று நேர்த்திகடன் செலுத்துனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கொப்புடையம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசிதி பெற்றதாகும். இங்கு வருடம் தோறும் வைகாசி மாதம் 10 நாள் திருவிழா நடத்துவது வழக்கம்.இதனிடையே சில உள்ளூர் பிரச்னை காரணமாக கடந்த சில வருடங்களாக அம்மன் கோயிலில் திருவிழா தடைபட்டிருந்த நிலையில், நடப்பு வருடம் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்ததால் அப்பகுதியினர் வைகாசி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி காப்பு கட்டப்பட்டு, அடுத்த நாள் பூச்சொரிதல் விழாவுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகப்படி திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்கள் நடத்தப்பட்டது.மேலும் கிராம மக்களை மகழ்விக்க ஒவ்வொரு நாள் இரவும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இனிடையே விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மற்ற கோயில்களை விட இங்கு சற்று மாறுபட்டும், சிறப்பாகவும் நடத்தப்படுவதால் அதனை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த நிலையில், கடந்த 27ம் தேதி 8ம் திருவிழா முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரானாது அம்மன் சிலை (பிரதிஸ்டை) இல்லாமல் கோயில் வாசலில் உள்ள தேரடியில் இருந்து பக்தர்களால் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டது.பின்னர் தெற்கு தெரு பாட கோயில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு 8ம் நாள் திருவிழா முடிவடைகிறது. இதனை தொடர்ந்து 9ம் நாள் திருவிழாவின்போது கோயில் வாசலில் நிறுத்தி வைக்கபட்ட தேர் மீண்டும் வடம்பிடித்து இழுக்கப்பட்டு கோனாபட்டு பை காண்மாய்க்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நீரில் வைக்கப்பட்டிருந்த கொப்புடையம்மன் சிலை தேரில் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பக்தர்கள்  தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

தேர் சென்ற வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து தேரானது அம்மன் கோயிலை வலம் வந்து நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தேரடியை வந்தடைந்தது. அப்போது சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகளை பக்தர்கள் கோயிலுக்கு பழிகொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.பெரும்பாலும் திருமயம் பகுதியில் நடைபெறும் தேர் திருவிழாக்கள் மாலை நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கோனாபட்டு கொப்புடையம்மன் கோயிலில் வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு வரை நடைபெறும் தேர்த்திருவிழா முற்றிலும் மாறுபட்ட வினோத திருவிழா என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதில் ஆத்தங்குடி,வெங்களூ, கே.பள்ளிவாசல், கீழசீவல்பட்டி, நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், காரைக்குடி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Koppudeyamman ,temple festival ,devotees ,
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து