×

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோயிலில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை, மே 30: புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார்கோவில் திடலில்  நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 760 காளைகள் பங்கேற்றன. இதில் மாடு முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில். இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தியதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு துவங்கியது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார்கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதிகாரிகளின் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோயில்காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, குடந்தை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இதில் 760 காளைகள் பங்கேற்றது. காளைகளை அடக்க 220 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றனர். காளைகள், மற்றும் வீரர்களை முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த திடலிலேய அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிசிச்சை அளிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Pudukkottai ,Ayyanar ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...