×

பெரம்பலூர் நகராட்சியில் கட்டிட இடிபாடு கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது

பெரம்பலூர், மே 30: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க, கட்டிடஇடிபாடு, மின்சாதனக் கழிவுகளை சாலைகளில், வடிகால்களில், நீர்நிலைகளில் கொட்டினால் அபராதம் என்று பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சிஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ளஅறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மத்தியஅரசு திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை முறைப்படுத்த திடக்கழிவு மேலாண்மை துணைவிதிகளை இயற்றியுள்ளது. இதன்படி ஒவ்வொரு நகராட்சியும் தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நகராட்சி கழிவுகளை சேகரித்தல், சேமித்தல், தரம்பிரித்தல், எடுத்துச்செல்லுதல், செயலாக்கம், இறுதியாக்கம் செய்தல்போன்ற பணிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எனவே கழிவுகளை உருவாக்குபவர் அந்தந்த நகராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கி ணைந்து கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்க்க வேண்டும். கழிவுகளைத் தரம் பிரித்து நகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் முறைப்படி அப்புறப்படுத்தவும் வேண்டும். இதன்படி நகராட்சி திடக்கழிவுகள் மேலாண்மை துணைவிதிகள் 2016ன் பிரிவு 4ன்படி கழிவை உருவாக்குபவர், அதனை குப்பையாக வெளியே போடுவதைத் தவிர்க்கும் பொறுப்புடையவராவர்.

சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் சுத்தமாகவும், வடிகால்வாய் தங்குதடையின்றி செயல்படவும், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுப்புற காற்றின்தரம் ஆகியவை மாசுபடுவதைத் தவிர்க்கவும், கட்டிட இடிபாடுகழிவுகளை, சாலைகளில் போடுதல், வடிகால்களில் கொட்டுதல் மற்றும் நீர்நிலைகளில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களிடம் சேகரம் செய்யப்படும் கட்டிட இடிபாடுகள் கழிவு மற் றும் மின்னணு சாதனக்கழிவுகளை நகராட்சியில் குறிப்பிட்ட இடங்களில் கொட்ட அனுமதிக்கப்படுகிறது. இதன்படி கட்டிடக்கழிவுகள் மற்றும் மின்சாதன கழிவுகள் ஆத்தூர் ரோடு, பொதுமயானம் அருகிலும், பெரம்பலூர் 4ரோடு அருகே துணைமின் நிலையம் பின்புறம், எஸ்ஆர் நகர் பூங்கா உள்ள பகுதியிலும் கொட்ட வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கவழிவகை செய்யப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடு கழிவுகளை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டி சுற்றுசூழலையும் பொதுசுகாதாரத்தையும் பாதுகாத்திட ஒத்துழைப்பு தரவேண்டும் என பெரம்பலூர் நக ராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : municipality ,Perambalur ,places ,
× RELATED பெரம்பலூர் புதிய பேருந்து...