குரவப்புலத்தில் மயானக் கொல்லை திருவிழா குழந்தை பாக்கியம் கிடைக்க சுடுகாட்டு சாம்பல் பிரசாதம்

வேதாரண்யம், மே 30:    வேதாரண்யம்  தாலுகா குரவப்புலத்தில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழாவில் மயானக் கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் வீதியுலா மஞ்சள் விளையாட்டுடன் நடைபெற்றன. நேற்று பரிவார தெய்வங்களான பெரியாச்சி காளி, காட்டேரி இடும்பன் ஆகியவை கோயிலிலிருந்து சுடுகாட்டிற்கு புறப்பட்டு சென்று அங்கு சுவாமிகள் நடனமாடி பின்பு பக்தர்களுக்கு சுடுகாட்டில் கோயிலின் பூசாரி வகையறாவான தெலுங்கு மனை செட்டியார் குடும்பத்தினரின் கடைசியாக இறந்து எரிக்கப்பட்டவரின் சாம்பல் மற்றும் கோயில் விபூதி பச்சையரிசி ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர்.

இப்பிரசாதத்தை சாப்பிட்டால் நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், பில்லி சூனியம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயில் திருவிழா தொடங்கியவுடன் பூசாரி வகையறாவிலுள்ள 27குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து விடுவது வழக்கமாக உள்ளது. பின்னர் பக்தர்களுக்கு தென்னம் பாலையால் அடித்து அருள்வாக்கு கூறி பிரசாதம் வழங்கினர். பின்னர் சுவாமிக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  விழா ஏற்பாடுகளை மருளாளிகள் கிராம வாசிகள் செய்திருந்தனர். இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>