மின்சாரம் தாக்கி வெல்டர் பலி

சிவகங்கை, மே 30: சிவகங்கை சிவகங்கையை அடுத்த ஒக்கூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). வெல்டிங் கடை வைத்துள்ளார். காண்ட்ராக்ட் அடிப்படையில் ஸ்டீல் கம்பி பணிகள் செய்து வந்த இவர் நேற்று சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை 11வது வார்டில் உள்ள ஒரு வீட்டில் ஸ்டீல் கதவு பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக செல்வராஜ் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து போனர். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>