×

துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி ரம்ஜான் பண்டிகைக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும்

ராமநாதபுரம், மே 30: ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என நவாஸ்கனி எம்பி கோரிக்கை வைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களிருந்து மாநிலத்தில் பல இடங்களிலும், வெளிநாடுகளிலும் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்கின்றன வகையில் சென்னை-ராமேஸ்வரம் இருமார்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளருக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ராமநாதபுரம், சிவகங்கை,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள், குறிப்பாக முஸ்லீம்கள் சென்னை உள்பட  நாட்டின் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். அனைவரும் ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்ட சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து இடநெருக்கடியை கருத்தில் கொண்டு 5ம் தேதி சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், 7ம்தேதி ராமேஸ்வரதில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். மேலும் சிறப்பு ரயில் சேவை விழுப்புரம், திருச்சி மதுரை வழியாக இயக்கப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Tags : civilians ,festival ,Ramzan ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.