×

கை கழுவாமல் சாப்பிட்டவர் சாவு

தேனி, மே 30: தேனி அல்லிநகரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிச்சை(65). இவர் தேனி கொட்டகுடி ஆற்றங்கரையில் உள்ள தனது தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பூச்சி மருந்து தெளித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த பிச்சை கைகளை கழுவாமலேயே இரவு உணவை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். அவரது மகன் சக்திவேல், வாந்தி ஏன் எடுக்கிறீர்கள்’ எனக் கேட்டுள்ளார். அப்போது பூச்சி மருந்து தெளித்த பின்னர் கைகளை கழுவாமலேயே வந்து சாப்பிட்டு விட்டேன் எனக்கூறி உள்ளார். சக்திவேல் உடனடியாக தனது தந்தையை தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி பிச்சை இறந்தார். தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : one ,
× RELATED பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா...