×

நொய்யல் ஆற்றை தூர்வார எதிர்பார்ப்பு

திருப்பூர், மே 30:திருப்பூர் நொய்யல் ஆற்றில் கால்நடைகள் மேய்வதற்கு தடை விடுத்து, ஆற்றை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில்  உருவாகும் நொய்யல் ஆறு, பேரூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 171 கிலோ மீட்டர் பயணித்து காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில் நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்றாக காலப்போக்கில் மாறியது.

கோவையை கடக்கும் போது கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன.அதுமட்டுமல்லாமல் திருப்பூரில் சுத்தீகரிக்கப்பட்டாத சாயப்பட்டறை கழிவுகளால் அதிக அளவு அமிலங்கள் மற்றும் வேறு தொழில் நிறுவனங்களின் கழிவுகளையும் நொய்யல் ஆற்றில் இரவு நேரங்களில் கொட்டிச்செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நொய்யல் ஆறு முழுவதும் கருவேல மரங்கள் முளைத்து தூர்வாரப்படாமலும் உள்ளது.

இந்நிலையில், அமிலங்கள் கலந்து வரக்கூடிய நொய்யல் ஆற்றில் கால்நடைகள் மேய்கின்றது. இங்கு மேயக்கூடிய கால்நடைகள் அமிலங்கள் கலந்து வரக்கூடிய நொய்யல் நீரை குடிக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் வரக்கூடிய அபாயமும் உள்ளது. இந்த ஆற்றுப்பகுதியில் கால்நடைகள் மேய்பதற்கு தடை விதித்து நொய்யலை தூர்வார வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Noyyal River ,
× RELATED கோவை மாவட்டத்தில் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு