×

பந்தலூரில் தொடரும் மின்வெட்டு

பந்தலூர், மே. 30 :  பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான பந்தலூர், தேவாலா, உப்பட்டி, சேரங்கோடு,  சேரம்பாடி பஜார், எருமாடு உள்ளிட்ட பகுதகிளில் அடிக்கடி மின்துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதித்துள்ளனர். மேலும் அரசு அலுவலக பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வகையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சீரான மின் விநியோகம் செய்ய வேண்டு என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவ்வப்போது இடியுடன் கூடிய மழை மற்றும் சூறைக்காற்று வீசுவதால் மின்கம்பம் மீது மரக்கிளைகள் விழுந்து அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் போதிய மின்பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் போதிய பராமரிப்பு பணிகள் செய்யாததால் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு நேரத்தில் மின்துண்டிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் இதனால் பெரும்பாலான பகுதிகள் இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED கடசோலை பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு