குப்பைகள் சேகரிக்க வீடுகளுக்கு வாளிகள் வழங்கல்

திண்டிவனம், மே 30:  திண்டிவனம் பிஆர்எஸ் அன் கோ மற்றும் திண்டிவனம் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திண்டிவனம் பெருமாள் கோயில் வீதியில் உள்ள கடைகள், வீடுகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நடைபெற்றது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக சேகரிப்பதற்கு ஒவ்வொரு வீட்டிற்கும், கடைகளுக்கும் இலவசமாக பிஆர்எஸ் சார்பாக இரண்டு வாளிகள் பிஆர்எஸ் ரங்கமன்னார் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஸ்ரீ பிரகாஷ், நகராட்சி பொறியாளர் பால்செல்வம், துப்புரவு அலுவலர் லிப்டன் சேகர் மற்றும் பிஆர்எஸ் கடை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், மனவள கலை துறை துணைத் தலைவர் பிரபாகரன், வாசவி கிளப் ஹரிபுருஷோத், வாசவிபிரபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : houses ,
× RELATED தொடரும் கனமழை: திண்டுக்கல், வருசநாட்டில் 7 வீடுகள் இடிந்தன