×

கூடலூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆதிவாசி மாணவர்களுக்கு நேர்முக தேர்வு

கூடலூர், மே 30: கூடலூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆதிவாசி மாணவர்களுக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்து. கூடலூர்-மைசூர் சாலையில் அரசு தொழிற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பழங்குடியின மாணவர்களுக்காக தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக கடந்த 2013ம் ஆண்டு பந்தலூர் தாலுக்கா உப்பட்டியல் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டது. அங்கு கட்டிட பணிகள் நடந்து வருவதால், தற்போது கூடலூரில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இந்த மையம் இயங்கி வருகிறது.

இங்கு பிட்டர், மோட்டார் மெக்கானிக், பிளம்பர், வயர் மேன், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இங்கு பயிற்சி முடித்த 50 பழங்குடியின மாணவர்களுக்கு முதல் கட்டமாக தொழில் வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வு தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது.
 தாட்கோ நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு முன்னணி தொழிற்பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தினர்.

கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் பழங்குடியின சமூகத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தொழிற்பயிற்சி மையம் உருவாக்கப்பட்டதாகவும், முதல் முறையாக சென்னை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று வேலை வாய்ப்பு பெறும் வகையில் இவர்களுக்கு இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதாகவும் தொழிற்பயிற்சி மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.


மேலும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர இதர இடங்களுக்கு மற்ற தரப்பு மாணவர்களும் இந்த வருடம் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேர்முகத் தேர்வின் போது தமிழ்நாடு முன்னணி தொழில் பயிற்சி நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஜோஸ்வா, பயிற்சி அலுவலர் குண்டன், உதவி பயிற்சி அலுவலர் செல்வராஜ், இளநிலை பயிற்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், குப்புசாமி, மேலாளர் ராம்பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Adivasi ,Cuddalore Government Vocational Training Center ,
× RELATED அடிப்படை வசதிகள் இல்லை நாடாளுமன்ற...