×

குன்னூர் ரேலியா அணை நீர்மட்டம் சரிவு

குன்னூர், மே 30:   குன்னுார் ரேலியா அணையில் தண்ணீர் வறண்டு காணப்படுவதால் குன்னூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் குன்னூரில் உள்ள 30 வார்டிற்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நீண்ட காலமாக குன்னூர் பகுதிக்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் தினமும் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்காமல், தவித்து வருகின்றனர். மேலும் குன்னூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் குடிநீரை விலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரேலியா அணை வெயிலின் காரணமாக தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதனால் குன்னூர் பகுதியில் கடும்  குடிநீர் தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Tags : dam water drops ,Coonoor Reelia ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு