×

பொள்ளாச்சி பகுதிகளில் இடியுடன் கன மழை

பொள்ளாச்சி, மே 30: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல மாதமாக மழையின்றி வெயிலின் தாக்கமே தொடர்ந்திருந்தது. அவ்வப்போது சாரலுடன் ஓரிருநாட்கள் மழை பெய்திருந்தாலும் வறட்சியின் கோரபிடி அதிகமாக இருந்தது. இதனால், விவசாய நிலங்களில் ஈரப்பதமின்றியும். போதிய தண்ணீர் இல்லாமலும், காய்கறி மற்றும் மானாவாரி சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இதையடுத்து, இதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போது சாரலுடன் கோடை மழை பெய்தது. பின் இந்த மாதம் துவக்கத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.

அவ்வப்போது சில மணிநேரம் தொடர்ந்து பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பின் கடந்த மூன்று வாரமாக மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமானது. இதில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது.  பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே ரோட்டோரம் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளது. நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் கனமழையாக வலுத்துடன், மழை நிறைவடையும் வரை 2 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் பொள்ளாச்சி நகரில் மட்டும் சுமார் 90 மிமீ., என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி மழையளவு வருமாறு: பரம்பிக்குளம் 6 மிமீ (மில்லிமீட்டரில்), ஆழியார் 6, காடம்பாறை 10, சர்க்கார்பதி 22, தூணக்கடவு 18, பெருவாரிபள்ளம் 22, நவமலை 2,4, பொள்ளாச்சி 90, வேட்டைக்காரன் புதூர் 21, மணக்கடவு 176, காங்கேயம் 30, நெகமம் 50, நல்லாறு 8.2, பெதப்பம்பட்டி 16மிமீ என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது.

Tags : areas ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!