×

சிதம்பரம் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு முன்னாள் மாணவர்கள் சக்கர நாற்காலி வழங்கல்

சிதம்பரம், மே 30: சிதம்பரம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் மற்றும் நகரும் படுக்கைகளை வழங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் மற்றும் நகரும் படுக்கைகளை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் முருகேசன் மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர்(பொ) பேராசிரியர் கிருஷ்ணமோகன், மருத்துவ புலமுதல்வர் ராஜ்குமார், துணைவேந்தரின் மருத்துவத்துறை ஆலோசகர் பேராசிரியர் சிதம்பரம், உதவிக் கண்காணிப்பாளர் ஜீனியர் சுந்தரேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க பொது செயலாளர் பேராசிரியர் சரவணன் மற்றும் பொருளாளர் சச்சிதானந்தனம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Chidambaram University Hospital ,alumni ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...