×

சாலையில் சரிந்த பயணிகள் நிழற்குடை

வி.கே.புரம், மே 30: கடந்த இருவாரங்களுக்கு முன்னர் பாபநாசத்தில் வீசிய சூறாவளியால் பயணிகள் நிழற்குடை சாலையின் மையப்பகுதியில் தூக்கி வீசப்பட்டது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்படும் வாகனஓட்டிகள், விரைவில் அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். நெல்லை மாவட்டம், பாபநாசம், வி.கே.புரம் பகுதிகளில் கடந்த 17ம் தேதி மாலை திடீரென சூறாவளியுடன் சுமார் 1 மணி நேரமாக கன மழை கொட்டித் தீர்த்தது. அத்துடன் பலத்த காற்றால்  பாபநாசத்தில் இரும்பு தகடுகளால் கட்டப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையானது தூக்கி வீசப்பட்டது. இது சாலையின் மையப்பகுதியில் விழுந்து  இரு வாரங்களாகியும் அகற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. அத்துடன் கோடை விடுமுறையையொட்டி பாபநாசத்திற்கு தற்போது ஏராளமான வாகனங்களில் வந்துசெல்லும் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட துறையினர், சாலையின் மையப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பயணிகள் நிழற்குடையை அப்புறபடுத்த முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Passengers ,road ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!