×

ராஜஸ்தான் அதிகாரிகள் அம்மா உணவகத்தை ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை ரூ1 க்கு இட்லி, மதியம் ரூ5 க்கு கலவை சாதம், இரவு ரூ3 க்கு சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தவிர்த்து மற்ற மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை பின்பற்றி பல மாநிலங்களில் மலிவு விலை உணவகங்களை பல மாநில அரசுகள் திறந்து வருகின்றன. இதன்படி ஆந்திராவில் என்டிஆர் அண்ணா உணவகம், உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திரா உணவகம், தெலங்கானா, ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் மலிவு விலை உணவகம் செயல்பட்டு வருகிறது.

இதைபோன்று ராஜஸ்தான் மாநிலத்தில் அன்னபூர்னா என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மா உணவக செயல்பாடு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நேற்று பார்வையிட்டனர். உதய்பூர் மாவட்ட ஆட்சியர் தலைைமயில் 3 அதிகாரிகள் கேஎம்சி மற்றும் சாந்தோம் ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது உணவு தயாரிக்கும் நடைமுறை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து அம்மா உணவத்தின் நிர்வாக அமைப்பு, தயாரிப்பு செலவு, பொருட்கள் வாங்கும் நடைமுறை உள்ளிட்டவைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரிவாக அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.  

Tags : Rajasthan ,mama restaurant ,
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...