திருச்சி என்ஐடியில் நடந்தது துறையூரில் கல்லூரி ஆசிரியையிடம் தாலிச்செயின் பறிப்பு

துறையூர், மே 29:   துறையூரில் தனியார் பொறியியல் கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் தாலிச்செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
துறையூர் சர்.பிடி நகரை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி பவளக்கொடி(45). இவர் சமயபுரம் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று மாலை பணி முடிந்து துறையூர் முசிறி பிரிவு சாலையில் இறங்கி அங்கிருந்து தனது டூவீலரை எடுத்துச் சென்றார். வீட்டருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கருப்பு நிற டூவீலரில்பின்னாலிருந்து வந்த மர்ம நபர்கள் இருவர் பவளக்கொடி அணிந்திருந்த 10 பவுன்தாலிக்கொடியை பறித்தனர். உடனே தாலி இருந்த பகுதியை கையில் இறுக்கி பிடித்ததால் தாலி மற்றும் குண்டு, காசு தப்பியது. தாலிக்கொடியை  மட்டும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக பவளக்கொடி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : incident ,
× RELATED வைரல் சம்பவம்