×

கள்ளக்காதலை கைவிட மறுப்பு வாலிபரை கத்தியால் குத்திய தந்தை, மகனுக்கு வலை

திருச்சி, மே 29:  திருச்சி ஏர்போர்ட் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (40). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராணி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பழகி வந்தனர். இதுகுறித்து அறிந்த செல்வராணியின் தந்தை உபகாரம், அண்ணன் பாஸ்கர் ஆகியோர் செல்வராணியை கண்டித்தனர்.
ஆனாலும் செல்வராணி, சரவணக்குமாரிடம் பழகுவதை நிறுத்தவில்லை.

மேலும் இது குறித்து சரவணகுமாரிடமும் பேசி கள்ளக்காதலை கைவிட கூறினர். அவரும் செல்வராணியிடம் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் மகன் இருவரும் நேற்று முன்தினம் சரவணகுமார் வீட்டிற்கு சென்றனர். அங்கு சரவணகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

இதில் வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயமடைந்த சரவணகுமார் மயங்கி விழுந்தார். தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதனையறித்த அக்கம்பக்கத்தினர் சரவணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த ஏர்போர்ட் போலீசார் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : Daddy ,
× RELATED முகமது சிராஜ் தந்தை காலமானார்