×

தேசிய இறகுப்பந்து போட்டியில் சாதனை பட்டுக்கோட்டை லாரல் பள்ளி மாணவி சாதனை

பட்டுக்கோட்டை, மே 29: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியில் பட்டுக்கோட்டை அடுத்த பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி அட்சயா, 19 வயதுக்கு இதே மாணவி அட்சயா கடந்த ஏப்ரல் மாதம் கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியில் நடந்த மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரட்டையர் பட்டத்துக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவி அட்சயாவுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். விழாவில் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன், மாணவி அட்சயாவுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குநர் கிட்டப்பா நன்றி கூறினார்.

Tags : Laurel School ,Pattukottai ,
× RELATED மாவட்ட அளவிலான போட்டியில் பாரத் பள்ளி மாணவர் சாதனை