×

திருவையாறு வட்டத்தில் ஜமாபந்தி நாளை துவக்கம்

திருவையாறு, மே 29: திருவையாறு வட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாளை துவங்கி 31ம் தேதி மற்றும் ஜூன் 4ம் தேதி நடக்கிறது. தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ் தலைமை வகிக்கிறார். அதன்படி நாளை நடுக்காவேரி சரகத்துக்கு உட்பட்ட திருவாலம்பொழில், நடுக்காவேரி (கிழக்கு), நடுக்காவேரி (மேற்கு), கருப்பூர், கோனேரிராஜபுரம், மன்னார்சமுத்திரம், ஈஸ்வரன்கோவில்பத்து, வரகூர் அள்ளுர், அம்பதுமேல் நகரம், குழிமாத்தூர், வெள்ளாம்பெரம்பூர் (கிழக்கு), வெள்ளாம்பெரம்பூர் (மேற்கு) ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது.

31ம் தேதி கண்டியூர் சரகத்துக்கு உட்பட்ட தென்பெரம்பூர், நாகத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, முகாசா கல்யாணபுரம், கல்யாணபுரம் 1ம் சேத்தி, உப்புக்காச்சிபேட்டை, திருச்சோற்றுத்துறை, கல்யாணபுரம் 2ம் சேத்தி, கண்டியூர், ராஜேந்திரம், மணக்கரம்பை ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது. வரும் 4ம் தேதி திருவையாறு சரகத்திற்கு உட்பட்ட மகாராஜபுரம், வளப்பக்குடி, சாத்தனூர், மருவூர், வைத்தியநாதன்பேட்டை, கடுவெளி, மேலபுனவாசல், புனவாசல், விளாங்குடி முதன்மை, விளாங்குடி கூடுதல், செம்மங்குடி, பெரமூர், ஒக்கக்குடி, திருப்பழனம், ராயம்பேட்டை, காருகுடி, திருவையாறு (கிழக்கு), திருவையாறு (மேற்கு), பெரம்புலியூர் ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடக்கிறது. பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் நில அளவை தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு தாசில்தார் இளம்மாருதி தெரிவித்துள்ளார்.

இயற்கை வழி பயிர் பாதுகாப்பிற்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் கூறுகையில், பயிர் பாதுகாப்பு முறைகளில் ரசாயன மருந்துகளை மட்டுமே அதிகமாக பயன்படுத்தியதால் ஏற்பட்ட பல்வேறு தீய விளைவுகளினால்  தற்பொழுது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் ஒரு அங்கமான உயிரியல் முறை பயிர் பாதுகாப்பில்  விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அவற்றில் உயிர் எதிர்க் கொல்லிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பூசணம் மற்றும் பாக்டீரியா என்ற இரண்டு வகையான உயிர் எதிர்க் கொல்லிகள் பயன்பாட்டில் பாக்டீரியா வகையைச் சார்ந்த  சூடோமோனாஸ் ப்ளோர சன்ஸ் அதிக அளவில் விவசாயிகளால் பயன் படுத்தப்பட்டு வருகிறது. நேரடி நோய் கட்டுப்பாட்டில் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்: சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் ஆனது 2,4 டை அசிட்டைல் பிளோரா குளு சினால், பினாசின், பையோலூற்றின் மற்றும் பைரால் நைட்ரின் போன்ற நோய் எதிர்ப்பு பொருள்களை உற்பத்தி செய்து பயிர் நோய்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது.

இது மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேரழுகல், வாடல் நோய், நாற்றழுகல் நோய் மற்றும் வேர் வீக்க நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன் இலை வழியாக பரவும் பூசன நோய்களான குலை நோய், இலை யுறை கருகல் நோய், இலைப் புள்ளி நோய் மற்றும் ஆன்த்ராக்னோஸ் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது.

மறைமுக நோய் கட்டுப்பாட்டில் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்: இம்முறையில் நோய்களை உண்டாக்கும் காரணிகளை நேரடியாக தாக்காமல் மற்ற நோய் எதிர்ப்பு நொதிகளான பெராக்ஸிடேஸ், பாலிபீனால் ஆக்ஸி டேஸ், பினைல் அலனின் அம்மோனியா லையேஸ், குளுக்கனேஸ் மற்றும் கைட்டினேஸ் போன்றவற்றை தாவரத்தில் அதிக அளவில் சுரக்க வழிவகை செய்து அதன்மூலம் நோய் காரணிகளின் வளர்ச்சி வீதத்தைக் குறைக்கிறது.

மேலும் இந்த வகை பாக்டீரியம் சிடரோ போர்  என்ற இரும்பு அயனியை உட்கிரகிக்கும் வல்லமை உடையது. இதன் மூலம் மற்ற நோய் உண்டாக்கும் பூசனங்களுக்குத் தேவையான இரும்பு சத்தை குறைத்து அதன் வளர்ச்சியை  தடுக்கிறது. இந்த பாக்டீரியம் நோய்களை கட்டுப்படுத்துவதுடன் நெல்லின் இலைச் சுருட்டு புழு, தண்டு துளைப்பான் ஆகியவற்றினால் ஏற்படும் தாக்குதலின் வீரியத்தையும் குறைக்கும் ஆற்றல் பெற்றவை. மேலும் வாழையில் வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற் புழு மற்றும் சுருள் நூற் புழு, காய் கறிகளில் வேர் முடிச்சு நூற் புழு போன்ற பல்வேறு நூற்  புழுவினால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது.

பயிர்களின் வளர்ச்சி  ஊக்கி: இந்த வகை பாக்டீரியம் நோய்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை  ஊக்குவிக்கும் ஹார் மோன்களான ஆக்ஸின், ஜிப்ரலின்  மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மற்ற உயிர் எதிர் காரணிகளுடன் ஒப்புமை தன்மை: இந்த பாக்டீரியம் மற்ற உயிர்  எதிர்  காரணிகளான பேசில்லஸ் சப்டில்லிஸ் மற்றும் டிரைக்கோடடெர்மா விரி டி போன்றவைகளுடனும் நன்கு ஒப்புமை உடையதாக உள்ளதால் இதை மற்ற உயிர்  எதிர்  காரணிகளுடன் சேர்த்து பயன்படுத்தும் போது நோயை கட்டுப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.

நெல் விதை நேர்த்தி செய்தல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் தேவை யான அளவு தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விடவேண்டும். பின்பு விதைகளை ஈர சாக்கிலிட்டு நிழ லில் உலர்த்தி முளைக்கட்டி விதைக்க வேண்டும். மேலும் வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடுவதனால் நாற்றங்காலில் அதனால்  கூடுதல் பயன் கிடக்கும்.
நாற்று நனைத்து பயன்படுத்துதல்: சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 1 கிலோவை 10 சதுர மீட்டர் நாற்றங் காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர்  ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நட வேண் டும். அதிக நேரம் ஊற வைத்தால் அதன் செயல் திறனும் கூடுதலாக இருக்கும்.

வயலில் இடுதல் : ஒரு ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 20 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து இடவேண்டும். தெளிப்பு  முறை: சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சத கரைசலை அதாவது 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில்  நடவு நட்ட 45 நாட்கள் கழித்து நோய் களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க  வேண்டும்.

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்: இது ஒரு சிக்கனமான மற்றும் எளிய முறை ஆகும். விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண நோய்களை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.பயிர்களின் நோய் எதிர்ப்பு  திறனை அதிகரிக்க  செய்கிறது.மண்ணிலுள்ள கனிம பொருட் களைப்  பயன்படுத்தி பல மடங்காக பெருகி பயிர்களுக்கு நீண்ட காலத்திற்கு பாதுகாப்பைத் தருகிறது.

இது பயிர்களின் வளர்ச்சி  ஊக்கியாக செயல்பட்டு பயிர்களின் மகசூலை அதிகரிக்க வழிவகை செய்கிறது. இவற்றை பயன்படுத்துவதால் நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்கும், மண்ணிலுள்ள மண்புழுக்களுக்கும் எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை.இவற்றினால் சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாவதில்லை. மேலும் இவற்றை பயன்படுத்துவதால் பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை என்பது சிறப்பான அம்சமாகும். இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் கூறினர்.

Tags : Thiruvaiyur ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் கோயில்களில்...