வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை அக்னி நட்சத்திர வெயிலை தாங்க முடியாமல்

தஞ்சை, மே 29: தஞ்சையில் அக்னி நட்சத்திர வெயிலை தாங்க முடியாமல் 2 குதிரைகள், குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கடையின் முன் நேற்று 3 மணி நேரம் தஞ்சமடைந்தது. தஞ்சாவூரில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 9 மணிக்கே துவங்கும் வெப்பம் மாலை 6 மணி வரை சுட்டெரிக்கிறது. குறிப்பாக கடந்த 5ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் இன்று (29ம் தேதியோடு) நிறைவடைகிறது.

அக்னி நட்சத்திரம் தொடக்கமும், முடிவும் கடுமையாக வெயிலடித்து வருகிறது. அதுவும் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலுக்கு பிறகு ஏராளமான மரங்கள் விழுந்ததால் வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்தே காணப்பட்டது. இந்த அக்னி நட்சத்திர நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெயில் 104 டிகிரியிலிருந்து குறையவில்லை. இந்த வெயிலுக்கு பயந்து பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் கடுமையான வெயில் அடித்தது. அப்போது தஞ்சாவூர் பாலாஜி நகரில் சாலையில் நடந்து வந்த 2 குதிரைகள், வெயிலில் நடக்க முடியாமல் சோர்வாக வந்தது. அப்போது சாலையோரம் இருந்த ஒரு வணிக வளாகத்தில் செல்போன் விற்பனை செய்யும் கடையில் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து வெளியே வந்த இதமான குளிரை அனுபவித்த 2 குதிரைகளும் அங்கேயே நின்று கொண்டது.

இதில் ஒரு குதிரை கடையின் வாசற்படி ஓரமும், மற்றொரு குதிரை சற்று தள்ளியும் நின்று கொண்டது. மதியம் 2 மணியலிருந்து மாலை 5 மணி வரை சுமார் 3 மணி நேரம் இந்த இரு குதிரைகளும் அப்படியே நின்று கொண்டு கடையிலிருந்து வந்த குளிர்காற்றில் வெப்பத்தை போக்கி கொண்டது.

கடையின் வாசலில் நின்றதை பார்த்த கடையில் உள்ளவர்களும், வெயில் அதிகமாக இருப்பதால் குதிரை நிற்கிறது, அரை விரட்ட வேண்டாம் என கருதி அப்படியே விட்டுவிட்டனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஓரமாக வந்து சென்றனர். இரு குதிரைகளும் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாததால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் “ மனிதர்களே இந்த வெயிலில் படாதபாடுபடும் நிலையில், பாவம் குதிரைகள் என்ன செய்யும்” அவை நின்று செல்லட்டும் என கூறினர். உல்லாசமாக பயணிக்கும் நாய் குட்டிகள் உயிர் எதிர்க்கொல்லி சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பயன்படுத்தலாம் குளிர்சாதனம் பொருத்திய கடையின் முன் 3 மணி நேரம் தஞ்சமடைந்த 2 குதிரைகள்

Related Stories: