×

விராலிமலை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி குளத்தில் பாய்ந்தது டிரைவர் பலி: 12 பயணிகள் படுகாயம்

இலுப்பூர், மே 29: விராலிமலை அருகே நேற்று அதிகாலை  லாரி மீது ஆம்னி பஸ் மோதி குளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார். இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பேர்  காயமடைந்தனர். சென்னையிலிருந்து  நாகர்கோவிலுக்கு தனியார் ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சீவலப்பேரியை சேர்ந்த சுந்தரம் மகன் முருகன்(35) ஓட்டினார். இதில் 32  பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் புதுக்கோட்டை  மாவட்டம் விராலிமலை அருகே கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் வந்தபோது,  முன்னாள் சென்ற லாரி மீது பஸ் மோதியது. இதில் ரோட்டோரத்தில் 100  மீட்டர் தூரம் பாய்ந்த பஸ் அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்தது.

இதில் டிரைவர் முருகன் பலியானார்.  நாகர்கோவிலை சேர்ந்த அசோகன் மகன் அபிஷேக்(21), நெல்லை தாம்சன் மகள்  ஜாஸ்மின்(18), விழுப்புரம் தாமோதரன்(37), நாகர்கோவில் பெர்ணான்டஸ் மகன்  ஆதித்யா(11), அருப்புகோட்டை செல்வம்(45) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த  விராலிமலை போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்  மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : passengers ,bus station ,
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...