கறம்பக்குடி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

கறம்பக்குடி, மே 29: கறம்பக்குடி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கழிழ்ந்து 5  பேர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடிக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை முட்டை ஏற்றிய லோடு ஆட்டோ வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடியை நோக்கி முட்டைகள் ஏற்றிய லோடு ஆட்டோ கறம்பக்குடி நோக்கி வந்தது. துவார் அருகே ஆண்டிகுலப்பன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது திடீரென முட்டை லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலை ஓரத்தில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.

முட்டை லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (40) மற்றும் முட்டை லாரியில் அமர்ந்திருந்த முருகன்,  வீரப்பன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்தபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த தீத்தானிபட்டியை  சேர்ந்த செல்வராஜ் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மழையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து சேதமடைந்தது.

Tags : Karambukudi ,
× RELATED வாழப்பாடி அருகே தனியார் பேருந்தும்...