மருந்துக்கடை உரிமையாளர் கிணற்றில் குதித்து தற்கொலை

பொள்ளாச்சி, மே 29:பொள்ளாச்சி பல்லடம்ரோடு அண்ணா அவன்யூ பகுதியை சேர்ந்தவர்  சண்முகசுந்தரம்(39). இவர், வெங்கட்ரமணன் வீதியில் மருந்து கடை நடத்தி  வந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரத்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இதனால், அவர் நடத்தி வந்த மருந்துகடையை சில மாதங்களுக்கு  முன்பு மூடிவிட்டார்.இதையடுத்து அவருக்கு கடன் பிரச்னை இருந்ததால்  மனவேதனையில் இருந்துள்ளார். மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக  கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியேறிய  அவர், வெகுநேரம் கடந்தும் வராததால், அவரை உறவினர்கள் தேடும் பணியல்  ஈடுபட்டனர். அப்போது, சேதுபதி கார்டனில் உள்ள ஒரு தனியார் தோட்டத்து  கிணற்றில் பிணமாக கிடந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையால்,  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து  மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதித்து விசாரிக்கின்றனர்.

Tags : drug shop owner ,suicide ,well ,
× RELATED போடியில் கந்துவட்டி கொடுமையால் முதியவர் தற்கொலை