×

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

கூடலூர், மே 29:  முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதிகளில் நேற்று முதல் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிவட்ட பகுதிகளான மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமரஹடா ஆகிய நான்கு வனச்சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று காலை முதல் துவங்கியது. இதில் ஒருநாள் கணக்கெடுப்பு பணியில் கலந்துகொள்ளும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புலிகள் காப்பக வெளிவட்ட இணை இயக்குனர் ஜெயராஜ் தலைமையில்  வனச்சரகர்கள் காந்தன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

   இந்த கணக்கெடுப்பு பணி 35 நேர்கோட்டு பகுதியில் நடக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் நேரடிப்பார்வை, கால் தடயங்கள், எச்சம்  உள்ளிட்ட பல்வேறு  தடயங்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் தாவர உண்ணிகள், ஊண் உண்ணிகள் ஊர்வன பறப்பன உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. ஜூன் 3ம் தேதி இப்பணிகள் முடிவடையும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Mudumalai Tiger Reserve Wilderness Census Workshop ,
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...