×

பொன்னமராவதி-திருச்சி வழித்தடத்தில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் பயணிகள் புலம்பல்

பொன்னமராவதி,மே 29: பொன்னமராவதியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்துகளில் ஒருசில பேருந்துகளில் டிக்கெட் ரூ.50 என்பதை ரூ.65 என வசூல் செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொன்னமராவதியில் இருந்து திருச்சிக்கு அதிக அளவு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகிறது. ஒருசில அரசு பேருந்துகளில் ஒரு டிக்கெட் ரூ.50ம், ஒருசில பேருந்துகளில் ஒரு டிக்கெட் ரூ.65ம் வசூல் செய்யப்படுகிறது.தனியார் பேருந்துகளில் ரூ.50 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்க அரசு பேருந்தில் ரூ.65 வசூல் செய்வது எந்த வகையில் நியாயம் என பயணிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,
பொன்னமராவதியில் இருந்து அரசு பேரூந்தில் திருச்சிக்கு சென்றதற்கு ரூ.65 வாங்கினார்கள். திருச்சியில் இருந்து பொன்னமராவதிக்கு மற்றொரு அரசுப் பேரூந்தில் வந்தபோது ரூ.50 வாங்கினார்கள். உண்மையான கட்டணம் எது என்று எங்களுக்கு புரியவில்லை. அரசு பேரூந்துகளில் ஒரே வழித்தடத்தில் செல்லும் பேரூந்துகளில் கட்டண வேறுபாடு உள்ளதால் மக்கள் புலம்புகின்றனர். எனவே ஒரே  மாதிரியான கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : route ,Ponnaravarai-Trichy ,
× RELATED கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து:...