×

ஹால் டிக்கெட் வரவில்லை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டி கலெக்டரிடம் மாணவிகள் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 29: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை நீக்கப்பட்தையடுத்து நேற்று வழக்கம்போது பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படித்து வருகின்றனர். தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 20 மாணவ மாணவிகளுக்கு பணம் கட்டியும் தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்கலை கழக அதிகாரிகளிடம் மாணவ மாணவிகள் கேட்டபோது தேர்வு எழுதும் மையமான புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரிக்கு சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தேர்வு எழுதலாம் என்று கூறியுள்ளனர். அதை நம்பி நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவ மாணவிகள் சென்றபோது 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு நுழைவுச்சீட்டு வரவில்லை அதனால் அவர்களைத் தேர்வு எழுத கல்லூரி பேராசிரியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் மனு அளித்தனர். உடனடியாக பல்கலைக் கழக அதிகாரிகளிடம் பேசி எங்களை தேர்வு எழுதுவதற்கு அனுமதி பெற்றுத் தர  கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...