×

100 டன் உரம் வாங்க திட்டம்

கோவை, மே 29: ேகாவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை விரைவில் துவங்கவுள்ளதாக வானிலைத்துறை தெரிவித்துள்ளது. மலைப்பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பருவ மழையை முன்னிட்டு வேளாண் தேவைக்கு உரங்களை வாங்க விற்பனை முனையங்களில் இருப்பு வைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கோவை மாவட்டத்திற்கு இந்த பருவ மழைக்காக முதல் கட்டமாக 100 டன் பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி, யூரியா வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விவசாய கடன் அட்டைகளை காட்டி மானிய விலையில் உரம் ெபறலாம். உர விற்பனை நிலையங்களில் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாக மானிய விலை உரம் பெறும் விவசாயிகளை கண்டறியலாம். விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. உரம் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்கவேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்