×

அக்கறை செலுத்துமா மாவட்ட நிர்வாகம் காரைக்குறிச்சி செல்லும் சாலையில்

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசியும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் தா.பழூர், மே 29: அரியலூர் மாவட்டம் தா.பழூரிலிருந்து காரைக்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட நீர் கசிவால் வீணாகும் குடிநீர்.
தா.பழூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட காற்று வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட குழாயில் இருந்து தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி வருகிறது. அதனால் அந்த குழாயை சுற்றி அமைக்கப்பட்ட கட்டையில் உள்ள நீரில் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் சாலையில் கடந்து செல்பவர் என அனைவரும் குளிப்பது, துணி துவைப்பது கை, கால்கள் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் குடிநீர் மாசடைவதுடன் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட நீரை குடிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த நீர் கசிவால் அருகில் உள்ள ஒரு குட்டையில் நீர்  நிரம்பியுள்ளது.அதில் அருகில் உள்ள கிராம மக்கள் குளித்து வருகின்றனர். குட்டைகள் நிரம்பி வழிவதால் வெயிலின் தாக்கத்தை தணிப்பது ஒருபுறம் இருந்தாலும் நீர்  கட்டையினுள் இறங்கி குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களால் குடிநீர் மாசடைகிறது. எனவே திறந்து கிடக்கும் கட்டையை மூடி உடனடியாக இந்த நீர்கசிவை நிறுத்தி கட்டைக்கு மூடி பொறுத்தி பொதுமக்கள் நீரை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Conciliation District Administration ,Karikkurichi Road ,
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...