×

46,993 மாணவ, மாணவியர் பயன் பெறுவர் பருத்தி செடியில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை

அரியலூர், மே 29: பருத்தி செடியில் வெள்ளை ஈக்கள் இலை பாகத்தின் அடிப்பாகத்தில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் வெளிர் பச்சை நிறமும், பின்பு பழுப்பு நிறமடைந்து காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. இதற்கு தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பண்ணெய் 3 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மிலி அல்லது வேப்பெண்ணெய் சார்ந்த அசடிராக்டின் 0.03 சத மருந்தை ஏக்கருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.

வெள்ளை ஈக்கள் ஒரு இலைக்கு 5 முதல் 10 பூச்சிகளுக்கு அதிகமானால் பொருளாதார சேத நிலையைத் தாண்டி விடுவதால் அசிட்டாமாபிரைட் 20 எஸ்.பி 40 கிராம், டையபென்தியூரான் 50டபில்யூபி 250கிராம்,ப்ளோனிகாமைட் 50 டபில்யூ.ஜி 40கிராம்,இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல் 50மிலி,தயாமீத்தாக்ஸாம் 25 டபில்யூ,ஜி 80கிராம்,பிப்ரோனில் 5 எஸ்சி 800 மில்லி,புரபினோபாஸ்50ஈசி 400மிலி ஆகிய ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் வாயிலாக செடிகளிலுள்ள இலைகள் முழுவதும் குறிப்பாக அடிப்புற இலைகள் நன்கு நனையுமாறு தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றனர்.

Tags : student ,cotton plant ,attacks ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...