×

பாளையம் மகாமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெரம்பலூர்,மே 29: பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில்  மகா மாரி யம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்னி குண்டத்தில் இறங்கினர். பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பாளையம் கிராமம். இங்குள்ள 1வது வார்டு பகுதி யிலுள்ள வெற்றி விநாய கர்,  மூப்பனார், பெரியாண்டவர் மற்றும் மகா மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா நேற்று   நடைபெற்றது. இத னையொட்டி கடந்த 20ம் தேதி (திங்கட்கி ழமை) காலை 10 மணிக்கு வடக்கே உள்ள கோனேரி ஆற்றங்கரைக்கு சென்று மூப்பனார் சுவாமியைக் குடி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 21ம் தேதி செவ்வாய்க்கிழமை  இரவு 12 மணி க்கு காப்பு கட்டப்பட்டது.

24ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு முதல் நாள் சுவாமி திருவீதி உலா நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25ம் தேதி அன்ன வாகனத்தில் சுவாமி புற ப்பாடும், மாவிளக்கு பூஜையும் நடைபெ ற்றது. 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு பத்து மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமிபுறப்பாடும் நடந்தது. 27ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பால் குடம் எடுத்தல் நடைபெ ற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுவர்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக ஏந்திச் சென்று கோயிலில் வந்து வழிபாடு நடத்தினர்.

மாலை 4 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல் அலகு குத்துதல் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கைகளில் அக்னிச் சட்டிகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். 10 பேர் அலகு குத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு பொங்கல் மாவிளக்கு  பூஜையும், இரவு 10 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (செவ்வாய்க்கி ழமை) காலை 8 மணிக்கு அக்னிகுழி இறங்குவதற்கு காப்பு கட்டப்பட்டது.

மாலை 4 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் மஞ்ச ள் ஆடை உடுத்தி ஊர்வலமாகவந்து மூப் பனார் கோவில் அருகே அமைத்த அக்னி குண்டத்தில் இறங்கி பக்திப் பரவசத்து டன் தீ மிதித்தனர். இதனைக்  காண்பத ற்கு பாளையம் கிராமம் மட்டுமன்றி குரு ம்பலூர், செஞ்சேரி, பெரம்பலூர், ஆல ம்பாடி, லாடபுரம், மேலப்புலியூர், சத்திர மனை, தம்பிரான்பட்டி, வேலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்க ளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதி யாக நேற்று இரவு தெருக்கூத்து நடை பெற்றது. இன்று( 29ம்தேதி)  மஞ்சள் நீராட்டுடன் காப்பு அவிழ்க்க ப்பட்டு விழா நிறைவடைகிறது.

Tags : devil festival ,Mahakamyamman ,devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...