மயிலாடுதுறையில் 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

மயிலாடுதுறை, மே 29: மயிலாடுதுறை கேணிக்கரை மெயின்ரோட்டில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் நேற்று மாலை குமார் என்பவரது வீட்டின் கொல்லை புறத்தில் கொட்டியிருந்த குப்பை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாகவே அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் தங்கமணி, வசந்தா, லட்சுமி,  நூர்ஜஹான், யசோதா, ஜெயலட்சுமி ஆகிய 7 பேரின் வீடுகள் மற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் வீட்டுஉபயோக பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி, தாசில்தார் மலர்விழி ஆகியோர் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மெயின்ரோட்டில் தீவிபத்து ஏற்பட்டதால்  மயிலாடுதுறை-திருவாரூர் வழிதடத்தில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : cottage houses ,Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை அருகே ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண் கடத்தல்