×

திருவாவடுதுறை ஆதீனத்தில் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை, மே 29: நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம்  திருவாவடுதுறை ஆதீன நடுநிலைப்பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழாவையொட்டி மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவர் குருநாதன், தலைமையிலான 12 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மருத்துவ முகாமிற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் சேயோன் தலைமை வகித்தார். முகாமை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : camp ,Thiruvaduduthurai Athinayam ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு