×

வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் பயனற்று கிடக்கும் சுகாதார வளாகம் சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம், மே 29: வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் பயனற்று கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பண்டாரதேவன்காடு பைரவர் கோவில் அருகே  அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.   இங்கு கழிவறையுடன் குளியல் அறைகளும் உள்ளன.  இதன் மூலம் இப்பகுதியில் உள்ள  மக்கள் மட்டுமின்றி அந்த வழியாக செல்பவர்களும் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில்  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இந்த சுகாதார வளாகம்  முற்றிலும் சேதமடைந்தது.  

அதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதை மக்கள்  தவிர்த்து விட்டனர்.  தற்போது சுகாதார வளாகத்தில் போதிய குடிநீர் வசதி  மற்றும் மின்வசதி இல்லாமல் உள்ளது. சுகாதார வளாகம் பயன்பாடு  இல்லாததால் பெண்கள் திறந்தவெளியையும், வயல்வெளியையும் கழிவறையாக பயன்படுத்தி  வருகின்றனர்.  இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும்  சிரமப்படுகின்றனர். எனவே தண்ணீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்து  மீண்டும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Vedaranyam ,health campus ,
× RELATED வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்...