×

தமிழகத்தில் அம்மன் கோயில்களில் கஞ்சி ஊற்ற அரிசி வழங்க வேண்டும்

சீர்காழி, மே 29: தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் கஞ்சி ஊற்ற அரிசி வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை: இஸ்லாமிய மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையும், 5 அடிப்படை கடமைகளில் ஒன்றான ரம்ஜான் விரதத்தை அவர்களின் மார்க்க வழிகாட்டுதலின்படி அரசியல் சார்பற்று கடைபிடிப்பது ஜனநாயகத்திற்கு சிறந்ததாகும். ஆனால் இப்தார் விருந்து எனும் பெயரில் அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களிலும், ஓட்டல்களிலும் நடத்தும் ரம்ஜான் கொண்டாட்டங்கள் சமூகத்தில் தீய விளைவை ஏற்படுத்துகின்றன.

இஸ்லாமிய மக்களை தாஜா செய்து ஏமாற்றி, அவர்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்களை அறுவடை செய்ய வேண்டும் எனும் ஓட்டு வங்கி அரசியலில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வருடந்தோறும் அரசாங்கம் சார்பில், அது திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் 4.500 மெட்ரிக்டன் தரமான அரிசி நோன்பு கஞ்சிக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அரசின் பொது நிதியிலிருந்து அதாவது இந்துக்களின் கோயில் நிதியிலிருந்து அதாவது 80 சதவீத இந்துக்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு ஹஜ்மானியம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது.
முல்லா, மெளல்வி, ஹாஜிக்களுக்கு மாதம் 20,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்து திருக்கோயில் பணியாளர்களுக்கும், பூசாரிகள், அர்ச்சகர்களுக்கும்  சம்பளம் மிகக்குறைவு. ரம்ஜான் பண்டிகைக்கு முஸ்லீம்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கி, இந்துத் தமிழர்களை தமிழகத்தில் புறக்கணிப்பது திராவிட இயக்கங்களின் வேலையாக போய்விட்டது.

அரசியல் கட்சிகள் இப்தார் விருந்து நடத்துவதை தடை செய்ய வேண்டும். இஸ்லாமியர்களும் புறக்கணிக்க வேண்டும். அரசியல் கட்சி அலுவலகங்கள், ஓட்டல்களில் இப்தார் விருந்து நடத்தி இந்து சமயத்தை அவமதித்து பேசுவோரை கைது செய்ய வேண்டும். நோன்புக்கு கஞ்சிக்கு அரிசி வழங்குவது போல தமிழர்களின் பண்டிகைகள் அம்மன் கோயில்களில் ஆடிக்கூழ் ஊற்ற தானியங்கள், அரிசி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Tamilnadu ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் திடீர் சோதனை..!!