லாரி மோதி முதியவர் பலி

க.பரமத்தி, மே.29: திருவாரூர் மாவட்டம் கீழ் மணலி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் ராஜேஷ்கண்ணா(37), இவர் தவிடு மூட்டை லோடு ஏற்றி கொண்டு காங்கேயம் நோக்கி டாரஸ் லாரியை இயக்கியுள்ளார். க.பரமத்தி அருகே ஆரியூர் ஊராட்சி பருத்திகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டான் (75) க.பரமத்தி கடைவீதியில் ரோட்டை கடக்க நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த லாரி மூதியவர் மீது மோதியது.
படுகாயமடைந்த முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். விபத்து குறித்து  லாரி ஒட்டுனர் மீது க.பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry ,
× RELATED டூவீலரில் சென்றவர் லாரி மோதி பலி