கரூர் மாரியம்மன் கோயில் விழா பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்

கரூர், மே29: கரூரில் மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு அதிகமான பொதுமக்கள் இன்று கூடுவார்கள் என்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாரியம்மன் கோயில் பண்டிகையின் முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் அதனைத் தொடர்ந்து நடைபெறும் வானவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகளை காண கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கரூர் நகரத்துக்கு கூடுதல் போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேம்படுத்தப்பட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளனர். கரூர் மனோகரா கார்னர் பகுதியில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதி வரை நூற்றுக்கணக்கான போலீசார் இன்று காலை முதல் மாலை வரை ரோந்து பணியில் ஈடுபடவும், ஜவஹர் பஜார் சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக கோயிலுக்கு சென்று வரும் வகையில் ஏற்பாடுகளும் போலீசாரால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், வான வேடிக்கை நிகழ்ச்சியின் போதும், அமராவதி ஆற்றுப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்வார்கள் என்பதால் அந்த பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : ceremony ,Karur Mariamman Temple Festival ,
× RELATED புளியங்குடியில் முப்பெரும் விழா