×

முன்னாள் ராணுவ வீரர்கள் நல்வாழ்விற்காக கரூர் வைஸ்யா வங்கி ரூ.5 கோடி நிதி வழங்கியது

திருச்சி, மே 29: கரூர்  வைஸ்யா வங்கி சார்பில் இந்திய ராணுவ நல்வாழ்வின் கூட்டாண்மை சமூக பொறுப்பு  பண்ட்டிற்காக ரூ.5 கோடி வழங்கியது. இதற்கான தொகையை வங்கியின் நிர்வாக  இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சேஷாத்ரி, டெல்லியில் இந்திய  ராணுவ ஜெனரல் விபின் ராவத்திடம் கடந்த 22ம் தேதி வழங்கினார். இதுகுறித்து  கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்  சேஷாத்ரி கூறுகையில், நாட்டின் பாதுகாப்பிற்கு இந்திய ராணுவம் சிறந்த சேவை  ஆற்றி வருகிறது. இதற்காக வங்கி சார்பில் இந்த தொகை வழங்கப்படுகிறது. மேலும்  ராணுவத்தினர் நமது எல்லையில் பாதுகாப்பில் ஈடுபடுவதால் மக்கள் முழுமையான  பாதுகாப்பான வாழ்வும், அமைதியான வாழ்க்கையை வாழுவதற்கு உங்கள் அர்ப்பணிப்பு  முக்கியமானதாக உள்ளது என்றார்.

இந்திய ராணுவ ஜெனரல் பிவின் ராவத்  கூறுகையில், வங்கி மூலம் இந்த தொகை வழங்கப்பட்டது ஊக்கம் அளிக்கிறது. இந்த  தொகையை நீண்டகால திட்டமான இந்திய ராணுவத்தில் நடப்பு திட்டங்களை  செயல்படுத்த உதவியாக இருக்கும். இதன்மூலம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும்  போரில் இறந்த வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர்களின் நல்வாழ்விற்கு  உபயோகப்படுத்தப்படும் என்றார். கரூர் வைஸ்யா வங்கி சார்பில் சமூக  மேம்பாட்டிற்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் உடல்நலம், கலை மற்றும்  கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிக்கும் உதவி செய்து வருகிறது  குறிப்பிடத்தக்கது.

Tags : Karur Vysya Bank ,personnel ,Army ,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...