×

இ சேவை மையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட கோரி உண்ணாவிரதம் ஊழியர்கள் கூட்டத்தில் முடிவு

கரூர், மே 29: இ சேவை மையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடக்கோரி உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்துள்ளனர். இ சேவை,ஆதார் சேவை யூனியன் (ஐடி.,ஐடிஇஎஸ்) ஊழியர்கள் கூட்டம் கரூர் அரசு ஊழியர்சங்க கட்டடத்தில் அருள்குமார் தலைமையில் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகேசன், அரசு ஊழியர்சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல்பேசினர். கூட்டத்தில், இசேவை மற்றும்ஆதார் சேவை மையங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது, ஊழியர்களிடம் சட்டவிரோதமாக பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்கவேண்டும்.

இணைய சேவையை முடக்கி பொதுமக்களை அழிக்காமல் நிர்வாக சீர்கேட்டினை சரிசெய்ய வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18ஆயிரம் வழங்கவேண்டும்.பொதுமக்களுக்கு சேவை செய்ய தேவையான பேப்பர்,டோனர், மற்றும் அத்தியாவசிய பொருட்களை உடனே வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ம்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags : convening ,hunger strikers ,service centers ,
× RELATED இ-சேவை மையம் மூலம் LLR விண்ணப்பிக்கலாம்:...