வைக்கோல் போரில் தீ

தாரமங்கலம், மே 29: தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி. திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான இவருக்கு சொந்தமான தோட்டம் தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ளது. அங்கு, 10க்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கால்நடைகளுக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. அதனை பார்த்த தோட்டத்து ஊழியர்கள், அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து  போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதுமா? என்ற கோணத்தில் தாரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : straw battle ,
× RELATED தீவிபத்தில் தம்பதி பலி