×

கொலை முயற்சியில் கைதான கைதி சிகிச்ைசக்கு அனுமதி

சேலம், மே 29:  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கைதி, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). கொலை முயற்சி வழக்கு ஒன்றில் தொடர்புடைய இவரை, கடந்த 20ம் தேதி தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டது முதலே மிகுந்த மனஅழுத்தத்தில் கோவிந்தராஜ் இருந்துள்ளார். இதனால், யாரிடமும் பேசாமல் நடமாடி வந்துள்ளார். இதனையடுத்து கோவிந்தராஜிக்கு மனநல சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்க சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, உள்நோயாளியாக சேர்ந்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED நர்சிங் மாணவி தற்கொலை