×

தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் தர அழைப்பு

சேலம், மே 29: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் காயின்டோனா என்ற தனியார் நிதி நிறுவனம்  செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் ₹1லட்சம் முதலீடு செய்தால் 15மாதத்திற்கு 20 சதவீத கூடுதல் தொகை வழங்குவதாக கவர்ச்சிகர திட்டத்தை அறிவித்தது. அதை நம்பிய சேலம் பொன்னம்மாப்பேட்டையை ேசர்ந்த விஜயஸ்ரீ(32),என்பவர் ₹ 4.14 லட்சம் முதலீடு செய்தார். முதிர்வு பெற்றும், முதலீடு பணத்தை திருப்பி தராமல் நிறுவனம் மோசடி  செய்தது வந்தது. இது தொடர்பாக,  அவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக 4 பேர் மட்டும் புகார் கொடுத்து, சேலம் சமரச மையத்தின் மூலம் பணத்தை திரும்ப பெற்று விட்டனர். இந்த வழக்கின் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதனால், இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செலுத்தி ஏமாந்தவர்கள் அசல் ஆவணங்களுடன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்து புகார் அளிக்கலாம் என குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags : institution ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு