×

விதிமுறையை மீறி இயக்கிய 375ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

சேலம், மே 29: சேலம் சரகத்தில் விதிமுறையை மீறி இயக்கிய 375 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சேலம் சரகத்தில் பிற மாநில ஆம்னி பஸ்கள் வரி செலுத்தாமல் இயக்கபடுகிறதா? ஆம்னி பஸ்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? அதிக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனரா? என்பது குறித்து அதிரடியாக சோதனை செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு சேலம் சரக போக்குவரத்து துணை கமிஷனர் சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம், தர்மபுரியில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்பார்வையில், மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பஸ் ஸ்டாண்ட், சுங்கச்சாவடி மற்றும் சோதனைச்சாவடிகளில் நின்று ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,278 ஆம்னி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், போக்குவரத்து விதிமுறையை இயங்கிய 375 ஆம்னி பஸ்கள் சிக்கின.
இதையடுத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களிடமிருந்து  ₹9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், வரியாக ₹11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. பர்மிட் இல்லாமல் இயக்கிய 2 ஆம்னி பஸ்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Omani ,
× RELATED ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது