×

ஜலகண்டாபுரத்தில் ₹30 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஜலகண்டாபுரம், மே 29:  ஜலகண்டாபுரத்தில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை ₹30 லட்சத்திற்கு ஏலம் போனது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த ஏலத்தில் ஜலகண்டாபுரம், இடைப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, தர்மபுரி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 650 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதலுக்காக குவிந்தனர். கொப்பரைகள் தரத்திற்கேற்றாற்போல் முதல் ரகம் குறைந்தபட்சமாக கிலோ ₹74 முதல் அதிகபட்சமாக ₹82.75 வரையிம், 2ம் ரகம் குறைந்தபட்சமாக கிலோ ₹46.50 முதல் அதிகபட்சமாக ₹63.10 வரையிலும் ஏலம் போனது. இதன் மூலம் ₹30 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Tags : Jalakandapuram ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சுத்திணறி பலி