×

நகரின் நீராதாரமான புதூர் ஏரி வறண்டது

கிருஷ்ணகிரி, மே 29: கிருஷ்ணகிரியில், வறட்சியால் நீரின்றி வறண்ட புதூர் ஏரி, குப்பை கூளமாக மாறி வருகிறது. இதை பருவ மழைக்கு முன்பே, தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரையொட்டி அமைந்துள்ளது புதூர்ஏரி. முக்கிய நீராதாரங்களில் ஒன்றான இந்த ஏரியின் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெற்றன. இந்த ஏரியின் மூலம் நெல், கரும்பு, சோளம், ராகி மற்றும் காய்கறிகள், பழங்கள் பூக்கள் என பலவற்றை சாகுபடி செய்தனர். முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த ஏரி தற்போது, வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. கடந்த ஆண்டில் தவறிய பருவ மழையால், ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. அதே போல், இந்தாண்டும் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன், பெய்த கோடை மழையால் ஏரிக்கு குறைந்தளவே தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால் கோடை கால வறட்சியால் தற்போது, நீர் குறைந்து சிறு குட்டைபோல் வறண்டு வருகிறது.

இந்நிலையில், வறண்டு வரும் ஏரியில், அங்குள்ள சிலர் குப்பை மற்றும் கோழி கழிவுகள், பழைய துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நீராதாரம் வெகுவாக பாதிக்கபட்டு வருகிறது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் சுறுகையில், கடந்த சில மாதங்களாக புதூர் ஏரியில் குப்பை கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் ஏரி மாசடைந்து வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வரவுள்ள பருவ மழைக்கு முன்னரே, புதூர் ஏரியை தூர் வார வேண்டும். இதனால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க 1077 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்கிருஷ்ணகிரி, மே 29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க, பொதுமக்கள் 1077 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் குறித்த புகார்களை பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மேலும் 04343 -234444 என்ற தொலைபேசி எண்ணிலும், 6369700230 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் தொடர்பு கொண்டு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதி குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : city ,Puthoor Lake ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்