×

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

காஞ்சிபுரம், மே 29: பிளஸ் 2  சிறப்பு துணைத் தேர்வு இன்று (மே 29 ) முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. ஜூன் 2019 பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்த (தட்கல் உள்பட) அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (மே 29ம் தேதி) மதியம் 2 மணி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம்  ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று Hall Ticket என்பதனை கிளிக் செய்து பழைய முறையில்  (1200 மதிப்பெண்கள்) தேர்வு எழுதும் தேர்வரா அல்லது புதிய முறையில் தேர்வு எழுதும் தேர்வரை என்பதை குறிப்பிட்டு, தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதி சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ் ) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வு எழுதும் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வு கூட அனுமதி சீட்டு இல்லாமல், எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்
டுள்ளது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு