×

முடிவெட்ட வந்த சிறுமி பாலியல் பலாத்காரம் சலூன் கடைக்காரர் கைது

சிவகங்கை, மே 29: சிவகங்கையில் சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார்(எ) கண்ணன்(28). இவர் இதே பகுதியில் சலூன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சலூனுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் தன் தந்தையுடன் முடிவெட்ட வந்துள்ளார். அந்த சிறுமியின் தந்தை கடைக்கு வெளியே நின்றுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார்(எ)கண்ணனை கைது செய்தனர்.

Tags : Saloon ,
× RELATED ஆர்ஜே பாலாஜி ஜோடியாக மீனாட்சி சவுத்ரி