×

அம்மையார்குப்பத்தில் காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள் நீர்குட அபிஷேகம்

பள்ளிப்பட்டு, மே 29: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில்  காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கத்திரி பூஜையை முன்னிட்டு மஞ்சள் நீர்குட அபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி மடக்கோயிலில் இருந்து மஞ்சள் நீர்குடத்தை பெண்கள் ஏந்தி, கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜி.பி.வெங்கடேசன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். மேள,தாளம் முழங்க எல்.என்.கோயில் தெரு, பாராஞ்சி தெரு, காந்தி சாலை, சேஷப்பமுதலி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களின் வழியாக காமாட்சியம்மன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை காமாட்சியம்மன் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags : Kamakshiyamman ,
× RELATED காமாட்சியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா கோலாகலம்