×

கொடைக்கானல் மலர் கண்காட்சியில் மயில் உருவம்

கொடைக்கானல், மே 29: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா நாளை துவங்கி ஜூன் 8 வரை நடக்கிறது. 3 நாட்களுடன் முடியும் மலர் கண்காட்சியை தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் என கோடைவிழா தொடர்கிறது. மலர் கண்காட்சி விழாவிற்கு பிரையண்ட் பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகளை கவரும் விதம் பல்வேறு உருவங்களை அமைத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அஷ்ட மரியா மலர்களில் நார்னியா மனித உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று இந்திய தேசிய பறவையான மயில் உருவம் கார்னேசன் வகை மலர்களால் அமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags : Peacock ,
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை