×

அம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகம்

நெல்லிக்குப்பம், மே 29: நெல்லிக்குப்பம் அருகே எய்தனூர் பகுதியில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த பத்மதலநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நிகரான ஸ்தலம் என கூறப்படுகிறது. இக்கோயிலில் நேற்று கோடை வெயிலின் தாக்கத்தை தணித்து மழை வேண்டி சூலினி துர்க்கை அம்மனுக்கு ராகுகால நேரத்தில் 108 இளநீர் அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் சூலினி துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.




Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது